அதிக அளவில் தடுப்பு ஊசி போட்ட சேப்பாக்கம், திருவலிக்கேணி

அதிக அளவில் Vaccine போட்ட Chepauk தொகுதி.. சாதித்து காட்டிய Udhayanidhi Stalin

சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வீதி,வீதியாக சென்று குறைகளை கேட்டறிந்த உதயநிதிக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி அமைத்தது முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் , மற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக மக்கள் பாராட்டு தெரிவிக்கின
7 மாத விவசாய போராட்டம்.. இன்று நாடு முழுக்க அணி திரளும் விவசாயிகள்.. ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்7 மாத விவசாய போராட்டம்.. இன்று நாடு முழுக்க அணி திரளும் விவசாயிகள்.. ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்
அதிலும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளை தொகுதி மக்கள் பாராட்டாத நாளே இல்லை எனலாம்.

 உதயநிதி 
உதயநிதியின்
தேர்தலுக்கு முன்னதாகவே உதயநிதி ஸ்டாலினின் பிரசார யுக்தி அவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது. தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பின்னர் தினமும் தொகுதிக்கு சென்று ஆய்வு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அங்குள்ள பள்ளிகள், அரசு மருத்துவமனைகளில் தினமும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மக்கள் 
மக்கள் பாராட்டு
தொகுதியில் தடுப்பூசி முகாம்களை நடத்துதல், மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என தனக்கு கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே செய்து வருகிறார் உதயநிதி. பொதுவாக சேப்பாக்கம் எப்போதும் திமுகவின் கோட்டையாக இருந்த போதிலும், அடிக்கடி தொகுதியை பார்த்து செல்லும் முதல் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்தான் என அப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர்.


ஆய்வு 
வீதி, வீதியாக ஆய்வு
இந்த நிலையில் நேற்றும் சேப்பாக்கம் தொகுதியில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் உதயநிதி ஸ்டாலின். தொகுதியின் ஜவஹர் ஹுசைன் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் அவர் ஆய்வு செய்தபோது நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காதிருக்க சிமெண்ட் சாலைக்கு பதிலாக தார் சாலை அமைத்திட வேண்டும், CCTV கேமரா அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை அப்பகுதியினர் வைத்தனர்.


பரிசு 
சைக்கிள்கள் பரிசு
இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உதயநிதி உறுதி அளித்தார். இதேபோல் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கிய சிறுவர்-சிறுமிகளுக்கு சைக்கிள்களையும் உதயநிதி ஸ்டாலின் பரிசாக வழங்கினார். வீதி, வீதியாக நடந்து சென்று குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினின் செய்லபாடுகளை பார்த்து அப்பகுதி மக்கள் உச்சி முகர்ந்தனர்

Comments