மூக்கிலிருந்து கொட்டும் ரத்தம்.. தமிழகத்தில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை.. அறிகுறி என்ன? சிகிச்சை எப்படி

மூக்கிலிருந்து கொட்டும் ரத்தம்.. தமிழகத்தில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை.. அறிகுறி என்ன? சிகிச்சை எப்படி
By:chand basha 
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரசில் இருந்து மீண்ட 32 வயதான சென்னை இளைஞர் ஒருவருக்குப் பச்சை பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நாட்டின் அனைத்து மாநிலங்களைப் பேலவே தமிழ்நாட்டிலும் கடந்த மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது தினசரி பாதிப்பு 35 ஆயிரம் வரை கூட சென்றது.
 7 தனிப்படை.. 5 ஸ்பெஷல் குழு.. கோவையை குலுக்கிய 7 தனிப்படை.. 5 ஸ்பெஷல் குழு.. கோவையை குலுக்க
அதன் பின்னர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னரே வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்தது. தற்போது தினசரி வைரஸ் பாதிப்பு ஐந்தாயிரத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது.


கொரோனா
கொரோனா வைரஸ்
கொரோனா புதிய வைரஸ் என்பதால் இது குறித்துப் பல தகவல்கள் இன்னும் நமக்குத் தெரியவில்லை. வேக்சின் கண்டுபிடித்தாலும்கூட கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நீண்ட கால பாதிப்பு எப்படி ஏற்படும் என்பது குறித்து எல்லாம் ஆராய்ச்சிகள் தொடர்கிறது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம் எனப் பல பகுதிகளிலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டது.


பச்சை பூஞ்சை
பச்சை பூஞ்சை
அதேபோல நாட்டில் சிலருக்கு வெள்ளை பூஞ்சை மற்றும் பச்சை பூஞ்சை பாதிப்புகளும்கூட ஏற்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தற்போது ஒருவருக்குப் பச்சை பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த 32 வயது நபருக்குப் பச்சை பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது


அறிகுறி
இது தான் அறிகுறி
அந்த நபர் சமீபத்தில் தான் கொரோனாவில் இருந்து குணமடைந்தார் என்றும் அவருக்கு நீரிழிவு பாதிப்பு இருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்த பின்னர், அவருக்கு உடல் சோர்வு, உடல் வலி, மஞ்சள் நிறத்தில் சளி, மூக்கிலிருந்து ரத்தம் வெளியேற்றம், கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலி உள்ளிட்டவை ஏற்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



ஏற்படுகிறது
ஏன் ஏற்படுகிறது
அவருக்கு நடத்தப்பட்ட எண்டோஸ்கோப்பி சோதனையில் பச்சை பூஞ்சை பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட டிஸ்யூக்கள் நீக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொரோன வைரசால் பாதிக்கப்படும் நபர்களுக்கு ஆன்டிபாடி மாத்திரைகள் வழங்கப்படும். இதனால் உடல் மிகப் பலவீனமாக இருக்கும். அப்போது பூஞ்சை பாதிப்பு எளிதாக ஏற்படும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கே பூஞ்சை பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.

Comments