அடி மடியில் கை வைக்கும் திமுக!

அடி மடியில் கை வைக்கும் திமுக!

அடிமடியில் "கை" வைக்கும் திமுக.. புஸ்வானமாகும் அதிமுக கணக்கு.. ஸ்டாலின் பிளானின் எதிர்பாராத ட்விஸ்ட் 
Updated: Wed, Jun 30, 2021, 11:40 [IST]
சென்னை: ஓபிஎஸ் ஒரு கணக்கு போட.. பாஜக வேறு கணக்கு போட.. இதற்கு நடுவில் திமுக நுழைந்து, இரு தரப்பின் கணக்குகளையும் தவிடுபொடியாக்கிவிடும் போலிருக்கிறது.. அப்படி ஒரு பரபரப்பு செய்தி தமிழக அரசியலை வட்டமடித்து கொண்டிருக்கிறது.

கடந்த 2019, மே மாதம் எம்பி தேர்தலில் வெற்றி பெற்றதுமே தேனியில் ஒரு பேட்டியை தந்தார் ஓபிஎஸ் மகன் ஓபிஆர்.. அப்போது, "மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கனவு எனக்கு சுத்தமாக கிடையாது" என்று சொல்லி இருந்தார்..
போலாம் ரைட்.. நாளை காலை 6 மணி முதல்.. சென்னையிலிருந்து 200 பஸ்கள்.. கிருமிநாசினியுடன் ஏற்பாடு செம! போலாம் ரைட்.. நாளை காலை 6 மணி முதல்.. சென்னையிலிருந்து 200 பஸ்கள்.. கிருமிநாசினியுடன் ஏற்பாடு செம!

ஓபிஆர் அப்படி சொல்லிவிட்டாலும், ஆரம்பம் முதலே இவருக்கும் சரி, ஓபிஎஸ்ஸுக்கும் சரி, எப்படியாவது அந்த மத்திய அமைச்சர் பதவியை வாங்கிவிட வேண்டும் என்று உறுதியாகவே இருப்பவர்கள்.. இதற்காகவே டெல்லியில் முகாமிட்டும் வந்தவர்கள்.. இதற்காகவே பாஜகவுடன் இணக்கமான போக்கையும் கடைப்பிடித்து வருபவர்கள்.

பாஜக
ஓபிஆர்
எந்த அளவுக்கு இணக்கம் என்றால், 'மக்களவையில் ஓபிஆர் பேசுவதை பார்த்தாலே, இவர் பாஜகவா? அதிமுகவா? என்று கேட்கும் அளவுக்கு இணக்கம் இழையோடி வருகிறது.. ஆனாலும் பாஜக, அவ்வளவு சீக்கிரம் மந்திரி பதவியை எடுத்து இவருக்கு தந்துவிடவில்லை... தேனியில் வெற்றி பெற்று இத்தனை வருடம் ஆகியும், இபபோதுதான், இவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படலாம் என்ற பேச்சு எழுந்து வருகிறது..

 அமைச்சரவை
விரிவாக்கம்
வரும் ஜூலை மாதம் மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க ஒரு திட்டம் இருக்கிறது.. அப்படி மாற்றி அமைக்கப்படும் அமைச்சரவையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு தரும் எண்ணமும் இருக்கிறது.. இதெல்லாம் சாத்தியமானால் நிச்சயம், ஓபிஆருக்கும் பதவி கிடைக்கும் என்று சலசலக்கப்பட்டு வருகிறது.. அடுத்தடுத்த தேர்தல்கள் தமிழகத்தில் வரஉள்ள நிலையில், அதிமுக கூட்டணியை பலப்படுத்தி கொள்ளவே, இப்படியான மூவ்களை பாஜக தலைமை எடுக்க இருப்பதாக தெரிகிறது.


ஊழல்
என்ட்ரி
ஆனால், இங்குதான் திமுக 'மாஸ் என்ட்ரி' தருகிறது.. கடந்த சில தினங்களாகவே, மாஜிக்கள் மீதான ஊழல் புகார்களை தூசி தட்டி எடுத்துள்ளது ஸ்டாலினின் அரசு.. இதற்காகவே ஒரு குழு நியமனமாகி உள்ளது.. மிஸ்டர் கிளீன் என்று சொல்லக்கூடிய அதிகாரிகள் இதில் ஈடுபட்டுள்ளனர்.. மாஜிக்கள் மீதான ஊழல் புகார்களை தூசி தட்டி, சட்ட ரீதியாக அதை எதிர்க்கக்கூடிய வழிமுறைகளை ஆலோசித்து வருகின்றனர். இந்த லிஸ்ட்டில்தான், ஓபிஎஸ் பெயரும் உள்ளதாக கூறப்படுகிறது..


சபை
பதவிக்கு சிக்கல்?
ஒருவேளை ஊழல் புகாரில் ஓபிஎஸ் சிக்க நேர்ந்தால், மகனையும் இது பாதிக்கும், அதனால் வரப்போகும் பதவிக்கும் சிக்கல் வரலாம் என்கிறார்கள். இதனால் ஓபிஎஸ் அதிர்ந்து போயுள்ளாராம்.. டெல்லியை தொடர்பு கொண்டு, இந்த சிக்கலில் இருந்து விடுபடும் அடுத்தடுத்த முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளாராம்.. மத்திய அமைச்சர் பதவி விவகாரத்தில் ஓபிஎஸ் ஒரு கணக்கு போட்டால், பாஜக வேறு ஒரு கணக்கு போட்டால், இதற்கு நடுவில் வந்து திமுக புது கணக்கு போட்டு தெறிக்க விட்டு கொண்டிருக்கிறது.. பார்ப்போம்..!

Comments